2025 மே 12, திங்கட்கிழமை

’சுய பாதுகாப்பை உறுதிபடுத்தவும்’

Kogilavani   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா 

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுய பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று, நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர்   ரவி குழந்தைவேல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பொகவந்தலாவை பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்  
இதனையடுத்து அவர்களுடன் தொடர்பைப் பேணிய 20 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கிருமிதொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, பிரதேச மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகைள முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

'நுவரெலியா மாவட்டத்தில் தற்போது 35பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர. கொரோனா தொற்று ஏற்படுமாயின் இந்தப் பிரதேசத்தில் அதனை பரிசோதிப்பதற்கு உபகரணங்கள் இல்லை. நுவரெலியா மாவட்டத்தில் ஓர் இயந்திரம் மட்டுமே உள்ளது. எனவே அனைத்து நபர்களுக்கும் பரிசோதனை செய்வதற்கான வசதிகள் இல்லை. எனவே மக்கள் வியாபார நிலையங்களுக்கும் வெளிஇடங்களுக்குச் செல்லும்போது சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைவாக நடந்துகொள்வது அவசியம்' என்றும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X