Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 04 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 06ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் சனிக்கிழமை (03) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுபெற்றுள்ளது.
அந்த வகையில் தேர்தலுக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்களினால் பொது இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தும் அகற்றும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (04) முன்னெடுக்கப்பட்டது.
பொகவந்தலாவ பகுதியில் வேட்பாளர்களினால் பொது இடங்களில் ஒட்டப்பட்ட அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றும் நடவடிக்கை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந் நிலையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் கொட்டியாகலை, கெம்பியன், கெர்க்கஸ்வோல்ட் கீழ் வட்டாரம், மேல் வட்டாரம் மற்றும் ஆரியபுர ஆகிய வட்டாரங்களில் ஒட்டப்பட்ட அனைத்தும் சுவரொட்டிகளும் அகற்றப்பட்டமை .
எஸ் சதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .