2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சு.க உறுப்பினரின் மீது ஆளுங்கட்சி தாக்குதல்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 13 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் சபை அமர்வு இன்று (13) ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது மஸ்கெலியா நகரில் சட்டவிரோதமாக  அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, ஆளுங்கட்சியின் உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தாக்கப்பட்டதாக உப தவிசாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தனது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில், குறித்த இருவருக்குமிடையிலான மோதலையடுத்து, சபை அமர்வுகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X