Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 07 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி என்ற பதாதையை வெளியில் காண்பித்துக்கொண்டு,வெளிநபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை வழங்கும் நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவரால் நேற்றுமுன்தினம் (5) விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, இதற்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சும் துணைநிற்கின்றது என்பதை மிகவும் உறுதியாக கூறிக்கொள்கின்றேன். இந்த இரகசிய கொடுக்கல் - வாங்கல்களை மூடிமறைப்பதற்காகவே மறுப்பறிக்கைகளும், ஊடக சந்திப்புகளும்
இராஜாங்க அமைச்சின் சகாக்களால் நடத்தப்பட்டுவருகின்றன என்றார்.
“ 1972 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியின்போது மலையக
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகள் சுவீகரிக்கப்பட்டன.மாற்று குடியேற்றங்களும்
இடம்பெற்றன. இதனால் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டன.
அன்று மலையக மக்கள் சார்பில் செயற்பட்ட அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும்
அரசாங்கத்தின் செயற்பாட்டை கடுமையாக எதிர்த்தன. ஆனால் இன்று என்ன நடக்கின்றது?
பெருந்தோட்டங்களை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட தோட்ட
வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின், இராஜாங்க பிரிவானது காணிகள் பறிபோவதற்கு துணைநிற்பதுடன், வெளியாருக்கு காணிகளை வழங்குவதற்கு தரகர் வேலையும் பார்க்கின்றது.
இதனை தடுத்து நிறுத்தி, எமது மக்கள் வளமாக்கிய மண்ணை அவர்களுக்கே சொந்தமாக்கி,
அவர்களை சிறுதோட்ட உரிமையாளர் என்ற நிலைக்கு கொண்டுவருவதற்கு நாம்
பாடுபடுகின்றோம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago