2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சூதாட்ட நிலையங்கள் சுற்றிவளைப்பு 15 பேர் கைது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெபரவ, ரத்கிந்த ஆகிய பகுதிகளிலுள்ள இரண்டு வீடுகளில், அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையங்கள், கிராந்துரு​கோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைதுசெய்யப்பட்டனர் என, கிராந்துரு​கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 8,475 ரூபாய் பணத்தையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 19, 20, 29, 30, 52 வயதானவர்களெனத் தெரிவித்த பொலிஸார், இவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X