மு.இராமச்சந்திரன் / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லாட்சி அரசாங்கத்தைப் பற்றி விமர்சித்து, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வரும் ஊவா மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான், தற்போது மாகாண சபை உறுப்பினரோ, மாகாண அமைச்சரோ அல்ல என்று கூறியுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், ஆனால், பாதுகாப்பு பிரிவை இன்னும் பயன்படுத்திககொண்டு நடமாடும் இவரது வேடம் குறித்து அம்பலப்படுத்துவதற்கு, தேர்தல் ஆணையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஹட்டனில் நேற்று (20) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
காட்டிக்கொடுப்புக்கு பேர்போன இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை தோட்டத் தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்துக்கு ஆப்பு வைக்கப்பார்ப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதற்கு சகுனி வேலை பார்த்த அப்பன், பிள்ளை, மாமன், மருமகன் என அனைவரும், தாங்கள் கேட்காத ஒத்துழைப்பைத்தருவதாக, கூறி வருவதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து கேட்டால், ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு இ.தொ.கா கோருவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனாமதேயக் கடிதம் அனுப்புவோர், பெயர் குறிப்பிட்டு அனுப்புவதில்லை என்றும் கூறினார்.
தீபாவளி முற்பண அறிவிப்பு விடுக்கப்பட்டபோது, முந்திக்கொண்டு, தாங்கள் ஆதரவு தருவதாக கூறும்போதே, இந்த அனாமதேய கடிதம், அவர்களாலேயே அனுப்பப்பட்டது என்பது, தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago