2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’செய்தி சேகரிப்பதற்கு தவிசாளரின் அனுமதி அவசியம்’

Editorial   / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தவிசாளரின் அனுமதியுடனேயே, பிரதேச சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க முடியுமென்றப் பிரேரணை, நோர்வூட் பிரதேச சபையில், இன்று (24) நிறைவேற்றப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேச சபையின் அமர்வு, அதன் தவிசாளர் கணபதி ரவி குழந்தைவேலின் தலைமையில், இன்று (24) காலை நடைபெற்றது.

இதன்போது, எந்தவொரு பிரதேச சபை அமர்வுகளிலும் தவிசாளரின் அனுமதியுடனேயே, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து, சபையின் உபதவிசளார்  தட்சணாமூர்த்தி கிஷோகுமார் உரையாற்றினார்.

இதேவேளை, நோர்வூட் பிரதேசசபையின் அமர்வின் போதோ அல்லது சபைத் தொடர்பான விடயங்கள் குறித்தோ,  சபையின் தவிசாளரின் அனுமதி பெறாது,   எந்த ஓர் உறுப்பினருக்கும் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஊடகவியலாளர்களை  அழைத்து வந்து செய்திகளை வழங்க முடியாது என,  நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவிகுழந்தைவேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, மேற்படிப் பிரேரணை எந்தவித எதிர்ப்புகளுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X