Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
அரசியல்வாதிகளிடம் அவர்களால் செய்ய முடியாத ஒன்றை யாரும் கேட்டு வந்தால், அவர்களுக்கு பாரிய அளவில் கோபம் வருவதாக, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.
கட்டுகாஸ்தோட்டை - நவயாலதென்ன பகுதியில், நேற்று (13) இடம்பெற்ற அரச அதிகாரிகளுக்கான சேவைகாலப் பயிற்சி வகுப்பு ஒன்றை ஆரம்பித்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நிர்வாகம் என்பது சுலபமானது என சிலர் கருதலாம். சிலர் கடினமானது எனவும் கருதலாம். ஆனால் ஒரு விடயத்தின் ஆழ, அகலங்களை நாம் சரியாக இனம் கண்டுகொண்டால், அது இலகுவானதான இருக்கும். சிலர் தமக்குப் போதிய விளக்கமின்மையை வெளிக்காட்டாது, கோபத்தினூடாக அதனை தீர்க்க முயற்சிக்கின்றனர்.
“உலகில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் எண்ணிலடங்காதவை உள்ளன. உயர் அதிகாரிகள் என்ற வகையில் உள்ளூராட்சி தொடர்பான விசேட விடயங்களை தெரிந்துவைத்திருத்தல் வேண்டும். அரச நிர்வாகத்தை விட சற்று வித்தியாசமான ஒரு துறையாக உள்ளுராட்சி விடயங்கள் உள்ளன. ஒரு முனையில் பொதுமக்களும் மறு முனையில் அரசியலும் நேரடித் தொடர்புபடுகின்ற ஒரு நிலை உண்டு” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago