2025 மே 03, சனிக்கிழமை

சேனா படைப்புழுவின் தாக்கம்

Gavitha   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

நாட்டில் பல பாகங்களிலும், சோளம் செய்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் சேனா படைப்புழுவின் தாக்கம், மஞ்சள், இஞ்சி போன்ற செய்கைகளுக்கும் தாவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ. ஹீனகெந்த தெரிவித்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், கடந்த வருடங்களைப் போன்று, இந்த வருடமும் சேனா படைபுழுவின் தாக்கம், சோளம் செய்கையைத் தாக்க ஆரம்பித்துள்ளது என்றும் அம்பாறை போன்ற பல பகுதிகளில், சோளம் செய்கையுடன் மஞ்சள், இஞ்சி செய்கைளையும் மேறகொள்ளப்படுவதால், அவற்றுக்கும் இத்தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இது தொடர்பில், விவசாயிகள் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது மஞ்சள் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளமையால், மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்த அவர், இந்த சந்தர்ப்பத்திலேயே, மஞ்சள் உற்பத்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் தமது விவசாயப் பயிர்களில் இப்படைப்புழுவை அவதானித்தால், உடனடியாக உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்குமாறு, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X