Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
கொட்டகலை பெருந்தோட்டக் கம்பனியின் கீழ் இயங்கும் எட்டுத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைக் காலக் கொடுப்பனவை, உடனடியாக வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் முன்வர வேண்டும் என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் சிங். பொன்னையா வலியுறுத்தியுள்ளார்.
குறித்த நிறுவனத்துக்கு உட்பட்ட மவுன்ட்வோணன், மேபீல்ட், போகாவத்தை, கெலிவத்தை, ஸ்டோனிகிளிப், டிறேட்டன், கிருஸ்லஸ்பாம், யுனிபீல்ட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைக் காலப் பணம், இதுவரை வழங்கப்படவில்லை என்று, தொழிலாளர்கள் தனது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
இத்தொழிலாளர்களை, தோட்ட நிர்வாகங்கள் வேலைநிறுத்தமும் செய்துள்ளன எனத் தெரிவித்த அவர், இவ்வாறான செயற்பாடுகளால், தொழிலாளர்கள் அநீதிக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும் விமர்சித்தார்.
தொழிலாளர்கள் ஓய்வுபெற்றவுடன், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய சேவைக் காலப் பணத்தை, 14 நாள்களுக்குள் வழங்குவதே வழக்கமாகும் எனத் தெரிவித்த அவர், ஆனால் மேற்குறிப்பட்ட தோட்டங்களில், தொழிலாளர்கள் தோட்டத்திலிருந்து ஓய்வுபெற்றவுடன், அவர்களது பணத்தை வழங்காமல், காலந்தாழ்த்துவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
“சேவைக் காலப் பணத்தை வழங்குவதில் தாமதம் ஏற்படுமாயின், தோட்ட நிர்வாகங்கள், வேலையிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் அவர்களுக்கு சேவைக் காலப் பணம் வழங்கும் வரை, அத்தோட்டத்திலேயே வேலை வழங்கலாம். அதை விடுத்துவிட்டு, அவர்களை வேலையிலிருந்து நிறுத்திவிட்டு, இவ்வாறு கொடுப்பனவுகளை வழங்காமல் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது” என்று அவர் மேலும் கூறினார்.
எனவே இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்தார்.
14 minute ago
23 minute ago
34 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
34 minute ago
47 minute ago