2026 மே 01, வெள்ளிக்கிழமை

சொந்த வீட்டுக்கு தீ வைத்த மகன் மாயம்

Sudharshini   / 2015 செப்டெம்பர் 02 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

குடும்பத் தகராறுக் காரணமாக, வயோதிப தந்தையின் கையை முறித்துவிட்டு வீட்டுக்கும் தீவைத்துவிட்டு, தனது மனைவியுடன் தலைமறைவான நபரை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தாக்குதலில் காயமடைந்த வயோதிபர், மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் அசலக்க, பல்லேகமவில் திங்கட்கிழமை(31) இடம்பெற்றுள்ளது. வீடு, காணி உரிமை தொடர்பாக தந்தைக்கும் மகனுக்குமிடையே முறுகல் ஏற்பட்டுள்ளதுடன் இதுவே பின்னர் தாக்குதலுக்கும் காரணமாகியுள்ளது.  

இதில், தந்தையை மகன  கடுயைமாக தாக்கியுள்ளதுடன் அவரது கையை முறித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .