Niroshini / 2015 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டே நுவரெலியா மாவட்ட மக்கள் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிப் பெறச் செய்துள்ளனர்.இந்த மக்களின் தேவைகளை அறிந்து சேவைகளை செய்வதற்கு சிறந்த திட்டங்களை வகுப்போம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
டிக்கோயா, மணிக்கவத்தைத் தோட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நடைபெற்று முடிந்த தேர்தலில் இலங்கையில் வாழுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற தலைவராக திகாம்பரம் திகழுகின்றார்.
மக்களிடம் அவர் காட்டி வரும் சிறந்த அணுகுமுறையும் சிறந்த சேவையுமே இந்த வெற்றிக்கு காரணமாகும்.
மேலும், தோட்டப்பகுதிகளில் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago