Editorial / 2022 ஒக்டோபர் 03 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டது. வெளியிட்ட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீள் பெற்றமை வரவேற்கத்தக்கது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்ற கட்டடத் தொகுதி மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் உயர்நீதிமன்றம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையில், கடற்படை தலைமையகம், பொலிஸ் தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவ தலைமையகம் பிரதமர் அலுவலகம் அலரிமாளிகை மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படை தளபதிகளின் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகள் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.
இதனால், இலங்கையில் அசாதாரண நிலை இன்னும் காணப்படுவதாக சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனவே இவ்வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டமையால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சர்வதேச உதவிகள் கிடைப்பது தாமதமாகும். எனவே நாட்டின் நலன்கருதி சர்வதேச ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் முகமாக இந்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மீள் பெற்றிருந்தமை வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago