2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஜீப் விபத்து; வியாபார நிலையத்துக்குச் சேதம்

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஜீப் வண்டியொன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின் சென்கிளயர் பகுதியில், வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், எவருக்கும் எவ்விதக் காயங்களும் ஏற்படவில்லை என்றுத் தெரிவித்த பொலிஸார், எனினும், ஜீப் வண்டி மற்றும் வியாபார நிலையம் என்பன, பாரியளவில் சேதமடைந்துள்ளனவெனக் குறிப்பிட்டனர்.

ஜீப் வண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே, இவ்விபத்துக்குக் காரணமென்று, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .