Janu / 2024 ஏப்ரல் 03 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் புதன்கிழமை (03) நடைபெற்றுள்ளது .
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இ.தொ.காவின் தவிசாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட முஸ்லீம் பள்ளிகளுக்கு அபிவிருத்தி பணிகளுக்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது .


8 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Nov 2025
06 Nov 2025