Editorial / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக, டயகம செல்லும் பிரதான வீதியில் அக்கரபத்தனை எல்பியன் பகுதியில் பிரதான வீதி தாழிறங்கியுள்ளது. எனவே, குறித்த பகுதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே மண் திட்டுகள் சரிந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் இதனால், பொது மக்களை அவதானமாகச் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
தாழிறக்கம் ஏற்பட்ட பகுதியை சீரமைப்பதற்கு அக்கரப்பத்தனை பிரதேச சபையினூடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் சீரமைக்கும் வரை அவ்வீதியினூடாக பயணங்களை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும், கனரக வாகனங்களை அவ்வீதியினூடாக செலுத்த வேண்டாம் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் இந்த பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago