2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

டிக்கோயாவில் நான்கு வைத்தியர்களுக்கு தொற்று

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

டிக்கோயா  ஆதார  வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர்,தாதியர்கள் 06 பேர் மற்றும் 04 வைத்தியர்கள் என  17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் வைத்தியசாலையில், கொரோனா தொற்று நோயாளர் வார்ட்டில் அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன்,   வைத்திய சேவை  நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொற்றுக்குள்ளான 17 பேரும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களோடு தொடர்பினை  பேணியவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொது சுகாதர அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X