எஸ்.சதிஸ் / 2018 ஏப்ரல் 26 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதிஸ்)
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (25) இரவு பெய்த கடும் மழைக் காரணமாக லயன் குடியிருப்பு ஒன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் லயன் குடியிருப்பு இடிந்து விழும் அபாயத்தில் காணப்பட்டபோதும் தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை அறிவித்துள்ளபோதிலும் தோட்ட நிர்வாகம் இது தொடர்பில் அலட்சிய போக்குடன் காணப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த லயன் குடியிருப்பில் இரண்டு பக்கங்களும் 24 வீடுகள் காணப்படுவதாகவும், தெரிவிக்கபடுகிறது.

குறித்த குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததையடுத்து பாதிக்கபட்ட மக்கள் தொடர்ந்தும் அதே குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியிருப்பதுடன் பாதிக்கபட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையினை ஹட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago