2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

டிங்கிரிமெனிகே வீடு திரும்பவில்லை

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

வலப்பனை -கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கும்புக்வெல, மெதிலந்த பகுதியில் வசித்த 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

 6ஆம் திகதி காலை 9.30 அளவில் வீட்டுக்கு அருகில் உள்ள காட்டு பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அவர் இதுவரை வீடு திரும்பாத நிலையில், அவரின் புதல்வர்களும் பிரதேச மக்களும் தேடி வருகின்றனர்.

இது தொடர்பில் அருகில் உள்ள தெரிபே பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸாரும் இணைந்து தேடுதலை முன்னெடுத்த போதிலும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

 

எனினும் கடந்த 8ஆம் திகதி முன்னெடுத்த தேடுதலில் குறித்த பெண் விறகு வெட்டுவதற்காக எடுத்துச் சென்ற கத்தியை கண்டுபிடித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, அருகில் உள்ள காட்டில் தேடிய போது, உடைந்த மரக் குற்றியில் குறித்த மூதாட்டி அணிந்திருந்த உடையும், விறகு தூக்கும் போது தலையில் வைத்துக் கொள்ள எடுத்துச் சென்ற சேலையும் கண்டெக்கப்பட்டுள்ளது. எனினும் மூதாட்டியை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.

 

இதனால் மோப்ப நாய்களை பயன்படுத்தி மூதாட்டியை கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

 

எனினும் இதுவரை காணாமல் போன டிங்கிரி மெனிக்கா தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X