2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

‘டிஜிட்டல் தராசு வேண்டாம்’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தோட்ட முகாமையாளரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும்,  டிஜிட்டல் தராசு
வேண்டாம்  என கோரியும்  பொகவந்தலாவை கீழ் பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு
ஆர்பாட்டமொன்றை நேற்று (23) முன்னெடுத்தனர்.

டிஜிட்டல் தராசில் பச்சை கொழுந்து நிறுக்கும் போது,  கொழுந்தின் எடையில்
மோசடி இடம்பெறுகின்றது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நேரம்
கொழுந்து நிலுவை இடம்பெறுகையில் சுமார்  10 கிலோ கிராம் வரை மோசடி இடம்பெறுகிறது.
அத்தோடு   உண்மையான கொழுந்தின் எடையை எங்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை  என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

ஆகவே, தோட்ட முகாமையாளரிடம் டிஜிட்டல் தராசு வேண்டாம்,  சாரதாரண தராசைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்த போதும், முகாமையாளர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என குற்றஞ்சுமத்துகின்றனர்.



இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் காட்டபிட்டிவை தொடர்பு கொண்டபோது, டிஜிட்டல்
தாரசு இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை
பெற்றே பெருந்தோட்டங்களில் டிஜிட்டல் தராசு பயன் படுத்துகின்றோம். டிஜிட்டல் தராசில் எந்த
மோசடியும் இல்லை வேலை செய்ய சோம்பேறித்தனம் உள்ளவர்களே இவ்வாறு பொய்
குற்றச்சாட்டை முன்வைத்து தொழிலாளர்களை தூண்டி விடுகின்றனர் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X