2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

டீசல் வரிசை குறை​வடைந்தது

R.Maheshwary   / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கடந்த சில வாரங்களாக நுவரெலியா மாவட்டத்தின் சகல நகரங்களிலும் உள்ள சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி ஆகிய நிறுவனங்களுக்குரிய எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு தேவையான டீசல் மற்றம் பெட்ரோல் என்பன போதியளவு கிடைத்து வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

நுகர்வோருக்கு தேவையான எரிபொருள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தடையின்றி விநியோகிக்கப்பட்டாலும் எரிபொருள் விலை அதிகரிப்பால் விற்பனையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை முன்னரைப் போன்று வரிசைகளில் காத்திருக்காமல் தமக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதாகவும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X