2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

டெக்டர் விபத்து: சாரதி பலி

Editorial   / 2023 ஜூலை 30 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெளசல்யா, ஆ.ரமேஸ்

பத்தனை மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து டெக்டர் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். அதில் பயணித்த ஏனைய இருவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெறுள்ளது.

 விறகுகளையும் .கொழுந்துகளையும்   ஏற்றி சென்ற டெக்டர் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது 

விபத்தில் இருவர் தப்பித்த நிலையில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தின் ஓட்டுனரான  3 பிள்ளைகளின் தந்தை எட்வர்ட் (52 வயது)  என்பவரே பலத்த காயங்களுடன் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடம் மிகவும் மோசமான பள்ளத்தாக்கான இடதுக்கு ட்ரெக்டர் வந்ததும் மற்றைய மூவரையும் வாகனத்தை விட்டு இறங்குமாறும் வாகனத்தில் ( பிரேக்) இல்லை எனவும் சாரதி சொல்லிவிட்டு வாகனத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X