2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

டெங்கினால் மற்றுமொரு பெண் மரணம்

Kogilavani   / 2017 ஜூலை 10 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா        

டெங்கு நோய் காரணமாக, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 52 வயது பெண்ணொருவர், சிகிச்சைப் பலனின்றி, நேற்று உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பதுளை இந்தகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஆர்.எம்.கருணாவதி என்ற பெண்ணே, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணத்துடன்,  பதுளை மாவட்டத்தில், டெங்கு நோயினால் மரணமானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

டெங்கு நோய் காரணமாக, கடந்தவாரம் பதுளை மாவட்டத்தில் இரு மாணவர்கள் உள்ளடங்களாக மூன்று பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பதுளை அரசினர் மருத்துவமனையில் 85 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டு, தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 360 பேர்  டெங்கு நோயாளர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .