Ilango Bharathy / 2021 ஜூன் 28 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்வதற்கு இனிவரும் காலங்களில் 5,000 ரூபாயை அறவிடப்படுவதற்கு நோர்வூட் பிரதேசசபையால் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
25ஆம் திகதி நடைபெற்ற சபையின் மாதாந்த அமர்விலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”கடந்த காலங்களில் கொரோனாவால் உயிரிழப்பவர்களைத் தகனம் செய்ய 15,000 ரூபாய் நோர்வூட் பிரதேச சபையால் அறிவிடப்பட்டு வந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டதாகவும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி தான் ஒரு மாத சிகிச்சையின் பின்னர், சபைக்கு திரும்பிய பின்னரே இது குறித்து அறிந்துக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இனிவரும் காலங்களில் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய 5,000 ரூபாயை மாத்திரமே அறவிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago