2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்

R.Maheshwary   / 2022 ஜனவரி 13 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவின் பள்ளேமுல்ல- ஹல்லொலுவ பிரதேசத்தில் வசித்து வந்த நபர் ஒருவர், கடந்த வருடம் டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் காணாமல் போயுள்ளார்.

திருமணமாகாத 39 வயதுடைய ரொசான் ரந்தெனிய என்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என அவரது பெற்றோரால் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென். அந்தனிஸ் மற்றும் ஜேர்மன் பயிற்சி கல்லூரியின் சிவில் பொறியியல் பிரிவின் பழைய மாணவரான இவர், நீண்ட நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனவே இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 0775488048, 0777802630 என்ற அலைபேசி இலக்கத்துக்​​கோ அறியத்தருமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .