Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூன் 09 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மே 29 அன்று மொனராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்பொக்க பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரிடமிருந்து சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் பெறுமதியுடைய தங்க சங்கிலியை அபகரித்துச் சென்ற இராணுவ வீரர் மற்றும் அவரது மைத்துனர் தம்பகல்ல பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்யப்பட்டனர்.
தம்பகல்ல, கல்பொக்க பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் நகரத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணிடமிருந்த தங்க சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர்.
சந்தேக நபரான இராணுவ வீரர் தியத்தலாவ இராணுவ முகாமில் பணியாற்றி வருபவர் எனவும் மற்றைய சந்தேக நபரான அவரது மைத்துனர் 15 வயதுடைய பாடசாலை மாணவன் எனவும் தெரியவந்துள்ளது.இருவரும் தெளிவ ஹெந்தியாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன் வழக்குப் பொருட்களும் சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமனசிறி குணதிலக
25 minute ago
37 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
37 minute ago
56 minute ago
1 hours ago