Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 03 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஹட்டன் மெண்டிஸ் மாவத்தை பகுதியில், நேற்று முன்தினம் (01) காலை 7.00 மணியளவில், நகரசபை தலைவரின் மனைவியிடமிருந்து, தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை, அபகரித்துச் சென்ற சந்தேகநபர் ஒருவரை, நேற்று (02) மாலை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், அன்றைய தினம் அதிகாலை, குறித்த பெண், கடைக்கு சென்று கொண்டிருந்த வேளையில், அவரிடமிருந்த தாலிக் கொடியினை, நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு ஓடியதாக, பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினையடுத்தே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின் மூலம், சந்தேகநபர் தான் திருடிய ஐந்து பவுன் பெறுமதியுடைய நகைகளை, ஒரு லட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவுக்கு, ஹட்டன் பிரதேசத்தில் உள்ள நகை கடை ஒன்றில் அடகு வைத்து செலவழித்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், இன்று (03), ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்பதுடன், குறித்த சந்தேக நபர், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த, ராமன் தினேஸ்குமார், வயது 27 எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
24 minute ago
33 minute ago
45 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
45 minute ago
54 minute ago