R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை ஏற்றிக்கொள்ள சென்றவர்கள், தடுப்பூசி கிடைக்காமையால் ஏமாற்றமடைந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சீனோஃபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை ஏற்றிக்கொண்டவர்கள், இன்று இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ள அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உஎத்தரவுக்கு மத்தியில், ஓட்டோக்களை வாடகைக்கு அமர்த்தி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வருகைத் தந்திருந்த நிலையில், வைத்தியசாலையில் இரண்வது டோஸ் கிடைக்கவில்லை என்றும், வேறொரு தினத்தில் வருமாறு வைத்தியசாலை நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டதால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சென்ற சிலர், வைத்தியசாலை நிர்வாகத்துடன் கலந்துரையாடியதையடுத்து. இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தடுப்பூசியை அனுப்புவதாக, உறுதியளித்ததையடுத்து, இன்று பிற்பகல் 2 மணிக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago