Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 22 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் ஹிஜ்ராபுர பிரதேசத்தில் தண்ணீர்த் தாங்கியின் மேல் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள வீட்டை இடித்து அகற்றுமாறு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டை இடித்து அகற்றுமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ஹட்டன்- டிக்கோயா நகரசபை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என அப்பகுதி மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் வினவியபோதே முன்னாள் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவித்த சடையன் பாலச்சந்திரன், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 15ஆம் திகதி நகர சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்துரையாடப்பட்டு நீதிமன்ற வழக்கை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமுல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் உள்ளுராட்சி மன்றங்களின் 19 ஆவது பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமையினால் நீதிமன்றத்தின் நிதிநிலையத்துக்கும் அறிவிக்கப்பட்டதுடன் அவரது அனுமதியுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தலைவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .