2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

தாதியை தாக்கிய ஐ.ம.ச அமைப்பாளர் கைது

Janu   / 2024 செப்டெம்பர் 26 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும்,தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவான , தாதி ஒருவரை கடந்த 21 ஆம் திகதி,தாக்கிய குற்றச்சாட்டில்  ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவ,  கைது செய்யப்பட்டுள்ளார்.  

சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்ற  நீதவான் ரசான்ஜி ரத்நாயக்க முன்னிலையில் வியாழக்கிழமை (26) ​அன்று   ஆஜர்படுத்திய போது  சந்தேக நபர் எச்சரிக்கப்பட்டு  200, 000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் , முறைப்பாட்டாளரும் சந்தேக நபரை அச்சுறுத்தியதாக சந்தேகநபர் நாவலப்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .