2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தனது ஒருவயது மகளுடன் குளத்தில் குதித்த இளம் தாய்

Janu   / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் குளத்தில் குதித்ததையடுத்து, சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

லிதுலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசிக்கும்    மகமணி தயானி (வயது 26) தன்னுடைய ஒருவயது குழந்தையுடன்  குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

தனது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் தன்னையும் தன்னுடைய குழந்தையையும்  துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதி, அந்த கடிதத்தை தனது திருமணச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் ஏரிக்கரையில் விட்டுச் சென்றுள்ளார்.

ஏரியில் குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட பெண்ணின் சடலம் குளத்தில் மிதப்பதாகவும், குழந்தையின் சடலம்  காணாமல் போய்யுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .