2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

‘தனிப்பட்டு யாரையும் கட்சிக்கு அழைக்கவில்லை’

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 30 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அல்லது விலகி சென்றவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களுக்கான கதவு மீண்டும் கட்சியில் திறக்கப்பட்டுள்ளது. இவர் தான் வர வேண்டும் அல்லது அவர் தான் வர வேண்டுமென யாரையும் தனிப்பட்டு அழைக்கவில்லை என, மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மலையக மக்கள் முன்னணியின் உயர்மட்ட குழுவோடு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கட்சியிலிருந்து விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் அனைவரையுமே அழைத்துள்ளோம்.

மாறாக அனுஷா சந்திரசேகரனுக்கோ அல்லது அரவிந்குமாருக்கு மாத்திரம் அழைப்பு
விடுக்கவில்லை. அடிமட்ட தொண்டன் வரையில் அனைவருக்குமே அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. கட்சியை மேலும் வலுபடுத்தும் முறையிலேயே இத்தீர்மானத்தை
எடுத்துள்ளோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X