2025 மே 03, சனிக்கிழமை

தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Janu   / 2024 ஜூலை 01 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா - தலவாக்கலை, பேருந்தோன்றின் சாரதிக்கும் , நுவரெலியா - ஹட்டன் சொகுசு பேருந்தோன்றின் சாரதிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து முரண்பாடு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இனந்தெரியாத நபர்களால் ஞாயிற்றுக்கிழமை (30) இரவு நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தி முன் பக்கம் உள்ள கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ள .

இதன் காரணமாக  நுவரெலியா - தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் திங்கட்கிழமை (01) ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக தலவாக்கலை - ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பேருந்துகள் மீது  தாக்குதல் நடாத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும்  என்பதை வலியுறுத்தியே தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செ.திவாகரன் , டி.சந்ரு  , செ.தி . பெருமாள்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X