R.Maheshwary / 2021 ஜூலை 25 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
நாவலப்பிட்டி பொ து வைத்தியசாலையின் கொரோனா வார்டிலிருந்து தப்பிச் சென்ற தொற்றாளர் ஒருவர், மீண்டும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
குருந்துவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான குறித்த நபர், தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்ட நிலையில், குருந்துவத்தை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரது நோய் தீவிரமடையவே, அவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இன்று காலை 8 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
தப்பிச் சென்றவர் அவரது வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், வைத்தியசாலை நிர்வாக,ம் குருந்துவத்த பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், மேரிவல பொலிஸ் காவலரணில் வைத்து தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர் சென்ற பஸ்ஸில் பயணித்த சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேரிவல தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 Jan 2026