2025 மே 14, புதன்கிழமை

தப்பியோடிய கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி

Freelancer   / 2023 மார்ச் 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய கைதியின் மீது சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி மரணமடைந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இம்புல்கொடையைச் சேர்ந்த மேற்படி கைதி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, சிறைச்சாலை கட்டடத்துக்கு அண்மையிலுள்ள காணியொன்றில் விழுந்து கிடந்த நிலையில், அதிகாரிகளால் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .