2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

’தப்புக் கணக்கு’ சிறுகதை நூல் வெளியீடு

மொஹொமட் ஆஸிக்   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மடவளை ஜே.எம்.சித்தீக் எழுதிய 'தப்புக்கணக்கு' சிறுகதை நூல் வெளியீட்டு விழா, மடவளை மதீனா மத்தியக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை (26) நடைபெற்றது.  

மாத்தளை தமிழ் இஸ்லாமிய இலக்கியப் பேரவையின் செயலாளர் எம்.எம்.பீர்.முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்,   தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.நிலாம்  கௌரவிக்கப்பட்டார்.

சமுக சமயப் பேச்சாளரும் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிகள் கோவில் அறங்காவலரும் வர்த்தகருமான முத்தையாப்பிள்னை ஸ்ரீ காந்தன் உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .