Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ், ஆர்.ரமேஸ்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச்
செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது நேற்று
முன்தினம் (1) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது தமிழ் நாட்டுக்கும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள்
செறிந்துவாழும், மலையகத்துக்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாக
கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் மலையகத்திற்கான அபிவிருத்தி பணிகள் குறித்தும்
இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் அம் மக்களுக்கு அறிவித்துள்ள இந்நலத்திட்டங்களுக்கு நன்றிகளையும், பாராட்டுகளையும் இச்சந்திப்பின் போது தெரிவித்ததோடு,
இத் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் பரிந்துரைப்பதாகவும் தமிழ் நாட்டு
முதலமைச்சரிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர்
காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையிலான உறவு நீடிக்கும் எனவும் இதன் மூலம் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மலையக மக்களுக்கு வந்தடையும் எனவும் நம்பிக்கை கொள்வதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago