Ilango Bharathy / 2021 ஜூன் 30 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி. சிவா
“மலையகம் எங்கள் தாயகம்“ எனும் தொனிப்பொருளின் கீழ் கல்வி, சமூக, கலாசார, அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் ஊடாக மலையக மாற்றத்துக்கான புதிய பயணத்தைத் தொடரும் “மலையக விழிகள் உதவும் கரங்கள்“அமைப்பானது, தனது ஐம்பதாவது உதவும் கரம் பணியை, கட்டபுலா- அரங்கலை தோட்டத்தில் அடுத்த மாதம் 4ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளது.
இவ்வமைப்பின் தலைவர்,திரு. குகநேஸ்வரனின் வழிகாட்டலில் குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 34 குடும்பங்களின்191 பேருக்கு உலர் உணவுப்பொருள்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.
‘அரங்கலை தோட்ட மக்களின் பட்டினியைப் போக்குங்கள்‘ எனத் தமிழ்மிரர் பத்திரிகையில் இம்மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்தியின் பலனாகவே, ஊவா மாகாணத்தில் இயங்கும் இவ்வமைப்பானது அம்மக்களின் துயர் போக்க முன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago