Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 18 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மாத்தளை மாவட்ட தமிழ் வணிக மாணவர் மாநாடும் வணிகாஸ்திரம் சஞ்சிகை வெளியீடும், மாத்தளை மகாத்மா காந்தி மண்டபத்தில், இன்று காலை 8 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளதாக, மாத்தளை மாவட்ட தமிழ் வணிக மாணவர் ஏற்பாட்டுக் குழு அறிவித்தள்ளது.
முதற் தடவையாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இம்மாநாடு தொடர்ந்து இரு தினங்களுக்கு நடைபெறவுள்ளதாகவும் மேற்படி குழு தெரிவித்துள்ளது.
முதல் நாள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், வணிகாஸ்திரம் சஞ்சிகை வெளியீட்டின் பிரதம அதிதியாக இலங்கை வர்த்தக வங்கியின் நடவடிக்கைகளுக்கான உதவிப் பொது முகாமையாளர் எஸ்.பிரபாகர் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டு வைக்கவுள்ளார்.
இம்மாநாட்டில், மாத்தளை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆர்.மணிவண்ணன், கணக்காய்வாளரும் வருமான வரி ஆலோசகருமான வி.சுதர்ஷன் உட்பட இன்னும் பல அதிதிகளும், சட்டத்தரணிகளும், கல்வி அதிகாரிகள், தொழிலதிபர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.
21 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago