2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தலதாவுக்கு வந்த பெண்ணிடம் தோட்டா

Editorial   / 2021 டிசெம்பர் 16 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி ஸ்ரீ தலதாமாளிகைக்கு வருகைதந்த பெண்ணொருவரின் கை​ப் பையிலிருந்து ரி.-56 ரக துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டா ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பெண் தலதா மாளிகை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண், தலதா மாளிகைக்கு பிரதான நுழைவாயிலின் ஊடாக செல்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும், அங்கிருந்த ஸ்கேன் கருவி அபாய ஒலியை எழுப்பியுள்ளது.

அதன்பின்னர், அந்த பெண்ணின் கைப்பை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதிலிருந்து தோட்டா கைப்பற்றப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் கணவன், பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். அவர், இன்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் மரணித்துவிட்டார் என, பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

வத்தேகமவில் வசித்துவந்த அந்தப் பெண், தன்னுடைய கணவன் இறந்ததன் பின்னர் காலி பிரதேசத்துக்குச் சென்று குடியேறியுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X