Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பல துருவங்களாகப் பிரிந்திருந்த அரசியல் தொழிற்சங்க, சமூகச் செயற்பாட்டாளர்களை, தலவாக்கலைப் போராட்டம் ஒன்றிணைத்துள்ளதெனத் தெரிவித்த, ஈரோஸ் அமைப்பின் இணைச்செயலாளரும் மலையகப் பிராந்திய பொறுப்பாளருமான ஜீவன் ராஜேந்திரன், இந்த ஒன்றிணைவானது, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில், தலவாக்கலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், ஈரோஸ் அமைப்புச் சார்பாக, உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குமாறு, தோட்டக் கம்பனிகளுக்கு வலியுறுத்துவதாகக் கூறியதுடன், இல்லையெனில் “தோட்டங்களை, உழைப்பவர்களின் உடமையாக்கு” என்ற கோரிக்கையை, ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் மத்தியில் அழுத்தமாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.
தலவாக்கலைப் போராட்டமானது, தொழிலாளர்களின் களம் எனக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்கள் அனைவரும் அரசியல் தொழிற்சங்க, இன, மத பேதங்களை மறந்து, பாட்டாளி வர்க்கமாய் எழுந்து நிற்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் கூறிய அவர், “தொழிலாளர்களின் இலக்கை நோக்கிய இந்தப் பயணத்தில், எமது அமைப்பின் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களிலுள்ள தோழர்களும் இணைந்துகொள்ளத் தயாராகவே உள்ளனர்.
“தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கப்பால், தோட்டத் தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு, தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, ஈரோஸ் அமைப்பு தனது பூரண ஆதரவை வழங்கி வருகின்றது” என்றும் குறிப்பிட்டார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதே எனக் குறிப்பிட்ட அவர், எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இதனை உணர்ந்து, தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் அவர் வேண்டினார்.
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
5 hours ago
27 Aug 2025