R.Maheshwary / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை லோகி தோட்ட மக்கள் நுவரெலியா -ஹட்டன் பிரதான வீதியில், தலவாக்கலை லோகி வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டதில் 100 ற்கு அதிகமான மக்கள் கலந்துக்கொண்டனர்.
கடந்த (21) திகதி மாலை குறித்த வழிப்பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆல மரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, அதன் கிளையொன்று உடைந்து பிரதான வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.
எனவே இதற்கு உரிய நீதி வேண்டும் இந்த கோவிலை தோட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் .அதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் பதாதைகளையும் கோசங்களையும் எழுப்பியவாறு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago