2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தலவாக்கலையில் சட்டவிரோத குடியிறுப்புகள் அகற்றப்பட்டன

Sudharshini   / 2015 செப்டெம்பர் 15 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜா

தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த வீடுகள், தற்காலிக குடிசைகள், கடைத்தொகுதிகள் என்பன நுவரெலியா மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று (15அகற்றப்பட்டன.

மேல்கொத்மலை, மின்சார பகுதிக்கு சொந்தமான இவ்விடத்தில் சட்டவிரோத குடியிறுப்புகள் அமைக்கப்பட்டமை தொடர்பாக மின்சார சபையினர் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பின்படியே மேற்படி குடியிறுப்புகள் நேற்று அழிக்கப்பட்டன.   

'எந்தவிதமான முன் அறிவித்தலும் வழங்காமல் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில்; வீடுகளை உடைக்கின்றோம் எனக் கூறி எமது குடியிறுப்பை அழித்தனர்' என பாதிக்கப்பட்ட நபரொருவர் தெரிவித்தார்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .