2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை தேடும் செயலாளர்

Editorial   / 2023 மே 25 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர விலாசத்தை, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை (25) அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் கனிக்ஷிகா டி சில்வா மேற்கண்டவாறு மன்றுக்கு ​அறிவித்தார்.

தோட்டத்தொழிலாளரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு​, உயர்நீதிமன்றத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மூர்து பெர்ணான்டோ மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகி​ய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் வியாழக்கிழமை (25) ஆராயப்பட்டது.

இந்த மனுவில், ​பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .