2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

தவறான மருந்து விநியோகம்; ஒருவர் கைது

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹன் செனவிரத்ன

மனநலம் குன்றிய நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்து, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வழங்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய, கண்டி- அம்பிட்டிய பிரதேசத்திலுள்ள மருந்து களஞ்சியலையொன்று நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டது.

மருத்துவர்களின் எவ்வித பரிந்துரையுமின்றியே இந்த மருந்து விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன், குறித்த சுற்றிவளைப்பின் போது, 17,000 போதை மாத்திரைகளும் கர்ப்பத்தை கலைப்பதற்கான 1,000 மருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மருந்தகம் ஒன்றையும் நடத்திச் செல்பவரென தெரிவித்துள்ள பொலிஸார், கைப்பற்றப்பட்ட மருந்துப்பொருள்கள், 1.7 மில்லியன் ரூபாய் பெறுமதியானதென்றும் தெரிவித்துள்ளனர்.

நாடுபூராகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்,  மனநலம் குன்றியவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு பாரிய கிராக்கி நிலவுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக சந்தைகளில் 100 ரூபாய்க்கு விற்கப்படும் இவ்வாறான மருந்துகள் போதைப்பொருள் அடிமையானவர்களுக்கு மாத்திரம் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X