2025 மே 03, சனிக்கிழமை

தவிசாளருக்குக் கொரோனா; பசில் கூட்டத்தில் சிக்கல்

Nirosh   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதி இவருக்குப் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அவர் வெளியில் பல இடங்களுக்கு சென்று வந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இம்மாதம் 18ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் கண்டியில் நடைபெற்ற நிகழ்விலும் இவர் கலந்துக்கொண்டிருந்தார். 

கடந்த 16ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டப் பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (20) வெளியானதில் அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர் செயற்பட்டிருப்பதாக பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அவரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, நாளை (21) கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்துக்கு சுகாதாரப் பாதுகாப்புகளுடன் அவர் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X