Niroshini / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஆ.ரமேஸ்
நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் மற்றும் நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் கே.கே.ரவி ஆகியோரக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, இவ்விருவரும் தங்களது சுயத்தனிமைப்படுத்தலில் இருந்து இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில், கடந்த 17ஆம் திகதியன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டிருந்த அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.கதிர்செல்வனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்றம் உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்களும் நுவரெலியா, கொட்டக்கலை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களும், சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (29) இரவு வெளியான பிசிஆர் பரிசோதனை அறிக்கையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு, தொற்றில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, நேற்று முன்தினம் (30) இரவு வெளியான பிசிஆர் பரிசோதணை அறிக்கை படி, நுவரெலியா பிரதேச சபை தவிசாளருக்கும் நோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து. இவ்விருவரையும் சுயதனிமைப்படுத்தில் இருந்து விடுவித்த சுகாதார பிரிவு, அவர்கள் தங்களது சபை தவிசாளர் கடமைகளை முன்னெடுப்பதற்கான சான்றுகளையும் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், நாளை (01) அவர்கள் தங்களது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளனர்.
அதேபோல், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும், தனது அமைச்சு கடமையில் ஈடுப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்றுக்குள்ளான நிலையில் தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வந்த அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் எஸ். கதிர்செல்வன், சிகிச்சை முடித்து, நேற்று (30) மாலை வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
4 hours ago
7 hours ago