2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தவிசாளர் கடமையேற்பு

Editorial   / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

எம்பிலிபிட்டிய நகர சபையின் தவிசாளர் லலித் கமகே, தனது கடமைகளை, நேற்று (02) பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா, எம்பிலிபிட்டிய நகர சபையின் உப நகரபிதா தினேஷ் மதுரங்க, ஓமல்பே சோபித தேரர், சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண சபை முன்னாள் உறுப்பினர் திபால் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.

எம்பிலிபிட்டிய நகர சபையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் 8 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் 1 உறுப்பினரும், ஜே.வி.பியில் ஓர் உறுப்பினர் என மொத்தமாக 13 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X