2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

Gavitha   / 2021 பெப்ரவரி 25 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டப்பகுதியில், 23ஆம் திகதி இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், சிகிச்சைப் பலனின்றி, நேற்று (24) இரவு உயிரிழந்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர், செனன் தோட்டத்தைச் சேர்ந்த காளிமுத்து சிவம் வயது (37) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

செனன் தோட்டத்தில், கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற பிறந்தநாள் வைபவத்தின்போது, அங்கு இரண்டு தரப்பினருக்கு ஏற்படட வாய்த்தர்க்கம், தொடர்ந்து ஒரு வாரமாக தொடர்ந்துள்ளது.

இதையடுத்து, ஹட்டன் – கினிகத்தேனை பிரதான வீதியின் செனன் தோட்டப் பகுதியில் இயங்கும் மதுபான நிலையத்துக்கு அருகிலுள்ள சந்தியில், கடந்த 23ஆம் திகதி இரவு, இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கத்திக்குத்து இடம்பெற்ற நிலையில், பலத்த காயத்துக்குள்ளான நபர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சைப் பலனின்றி, நேற்று (24) இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்வத்துடன் தொடர்புடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இது தொடர்புடைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X