2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

தாத்தாவிடமிருந்து தப்பிய சிறுவன்

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

13 வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 55 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 இந்த மாணவன், தனியார் வகுப்புக்குச் சென்று தன்னுடைய வீட்டுக்கு மாலை வேளையில் திரும்பிக்கொண்டிருந்த போது, அந்த மாணவனை ஏமாற்றி, கொங்கிரீட் தயாரிக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்ற போதே, அவரிடமிருந்து தப்பியோடியுள்ளார்.

பன்விலவை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேநபருக்கு, பாலியல் துஷ்பிரயோகம் ​செய்ய முயன்ற சிறுவனின் ஒத்த வயதில், பேரன் இருப்பதாக விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X